Monday, 27 March 2017

Pip and Lot Meaning

Pip என்றால் என்ன ?

“pips” மற்றும் “lots” பற்றி தெரியாமல் போரெக்ஸ் TRADING ஆரம்பிக்காதிர்கள்.
பொதுவாக Pip என்பதை currency இன் உயர்வை குறிப்பிடுவார்கள். உதரணமாக EUR/USD 1.4150 இல் இருந்து 1.4151 இக்கு உயர்ந்தால் அது ஒரு PIP ஆகும்.Pip என்பது குறிapட்டின் கடைசி இலக்க தசம எண் ஆகும். Pip உங்களின் லாப நஷ்டத்தை குறிப்பிட உதவுகிறது.

இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம், USD/JPY இன் மதிப்பு 119.80 இல் (பெரும்பாலான currency களில் 4 இலக தசம எண் கொண்டிருக்கும் ஆனால் USD/JPY 2 இலக தசம எண் கொண்டிருக்கும் )
அப்படியானால் USD/JPY இல் ஓர் PIP என்பது .01 ஆகும்.
அப்படியானால்,USD/JPY:119.80    01 பரிமாற்ற விலையோடு வகுத்தால் Pip விலை கிடைக்கும்.
.01 / 119.80 = 1.198

Lot என்றால் என்ன?

ஸ்டாண்டர்ட் லாட் சைஸ் என்பது 100,000 யூனிட்கள் ஆகும். மினி லாட் சைஸ் என்பது 10,000 யூனிட்கள் ஆகும். மைக்ரோ லாட் சைஸ் என்பது 1,000 யூனிட்கள் ஆகும். உங்களுக்கு ஏற்கனவே currency கள் pip களால் குறிப்பிடப்படுகின்றன என்பது தெரியும். Pip என்பதை currency இன் உயர்வை குறிப்பிடுவார்கள். அந்த சிறிய உயர்வை பயன்படுத்தி நாம் நிறைய சம்பாதிக்க முடியும்.

உதரணமாக நாம் ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் 100,000 யூனிட்கள் பயன்படுத்துவதாக வைத்துகொள்வோம். நாம் இப்பொழுது மீண்டும் ஓர் கணக்கு போடுவோம் இது Pip ஓட மதிப்பை எப்படி பாதிக்கிறது என்று பார்ப்போம்.
USD/JPY இன் பரிமாற்ற விலை (exchange rate) 119.80 எனில்
(.01 / 119.80) x 100,000 = $8.34 per pip

ஓர் பிப் ஓட மதிப்பு 8.34 டாலர் ஆகும்.currency இன் முதலில் USD குறிப்பிட வில்லை எனில் சற்று வித்தியாச படும்.
EUR/USD இன் பரிமாற்ற விலை (exchange rate) 1.1930 எனில்
(.0001 / 1.1930) X 100,000 = 8.38 x 1.1930 = $9.99734 முழுமையாக $10 per pip

பெரும்பாலான புரோக்கர்களிடம் நீங்கள் இலவசமாகவே டெமோ அக்கௌன்ட் ஓபன் செய்ய முடியும்.டெமோ அக்கௌன்ட் என்பது ஓர் மாதிரி அக்கௌன்ட் ஆகும், இது ரியல் (Real) அக்கௌன்ட் இல் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இது நீங்கள் கற்று கொள்வதற்கு மிகவும் உதவியாய் இருக்கும். இதில் நீங்கள் பணம் டெபாசிட் செய்யாமல் Trade செய்ய கற்று கொள்ளலாம். அதனால் இதில் ரிஸ்க் இல்லை. அதனால் டெமோ அக்கௌன்ட் நீங்கள் கற்று கொள்வதற்கும்  உங்களது திறமை- அறிந்து கொள்வதற்கும் மிகவும் உதவியாய் இருக்கும்.

குறைந்தது நீங்கள் 3 மாதம்  டெமோ அக்கௌன்ட் இல் கற்று கொள்ள வேண்டும்.
எல்லா போரெக்ஸ் குறீடுகளும் இரு வழி  விலைகளை கொண்டுள்ளன அவை Bid மற்றும் Ask ஆகும். Bid மற்றும் Ask இக்கு உள்ள வித்தியாசம் Spread என்று அழைக்க படுகிறது. இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,

இந்த GBP/USD இல், 1.7445 என்பது Bid விலை, 1.7449 என்பது Ask விலை ஆகும். இங்கு இந்த ப்ரோகர் இடம் வாங்குவதும் விற்பதும் மிக சுலபம். வாங்குவதற்கு Buy என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.விற்பதற்கு sell என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். இனி குறிப்பிட்ட currency எப்போது வாங்க வேண்டும் எப்போது விற்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் பார்போம்.

EUR/USD


இந்த உதாரணத்தில் EUR தான் base currency அதனால் EUR வை தான் அடிப்படையாக கொண்டு வாங்கவோ விற்கவோ வேண்டும். நீங்கள் US பொருளாதாரம் விழ்ச்சி அடைவதாக நம்பினால் அது USD இக்கு நல்லது அல்ல. அதனால் நீங்கள் EUR/USD Buy செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை வாங்குகிறீர்கள் இது USD விழ்ச்சி அடைவதால் மேலே உயரும். நீங்கள் US பொருளாதாரம் எழுச்சி அடைவதாக நம்பினால் அது USD இக்கு நல்லது. அதனால் நீங்கள் EUR/USD Sell செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை விற்குக்ரிர்கள் இது USD எழுச்சி அடைவதால் கீழே செல்லும்.