Monday, 27 March 2017

Risk Capital Stop Loss Take Profit

ரிஸ்க் கேபிடல் (இடர் முதலீடு):

ஏற்படக்கூடிய இழப்பினால் தங்கள் வாழ்க்கை முறை மாறாத அளவிற்கு அபாயத்தை சந்திப்பதற்கு வர்த்தகர்கள் தயாராக இருக்கக்கூடிய குறிப்பிட்ட தொகை.

ஸ்டாப் லாஸ் (இழப்பு நிறுத்தம்):

உங்கள் நிலைக்கு எதிராக சந்தை செல்லுமானால், இழப்புகளை தவிர்க்கும் பொருட்டு, ஒரு குறிப்பிட்ட விலையில், திறந்துள்ள நிலையை தானாகவே மூடிக்கொள்ளச் செய்கின்ற ஒரு வர்த்தக ஆர்டர்.

டேக் புராஃபிட் (லாபம் எடுத்தல்):

ஒரு குறிப்பிட்ட விலையில், ஒரு குறிப்பிட்ட தொகை லாபத்தை ஈட்டியபின் திறந்துள்ள நிலையை தானாகவே மூடிக்கொள்ளச் செய்கின்ற ஒரு வர்த்தக ஆர்டர். உங்கள் லாபத்தை ஈட்டுவதற்கு இந்த ஆர்டரைப் பயன்படுத்தலாம்.

டெக்னிகல் அனாலிஸஸ் ( தொழில்நுட்பப் பகுப்பாய்வு):

இவ்வகை பகுப்பாய்வு, கரன்சியின் வரைபட வடிவங்கள் மீது கவனம் செலுத்துகிறது. கரன்சியின் கடந்த கால நடத்தையைப் பார்ப்பதன் மூலம் அதன் எதிர்கால இயக்கங்களை கவனிக்க முடியும் என்று இது கருதுகிறது.