மார்க்கெட் ஆர்டர்(Market order) :
மார்க்கெட் ஆர்டர் என்பது அப்போது உள்ள மார்க்கெட் விலையில் ஆர்டர்-ஐ வாங்குவதோ அல்லது விற்பதோ ஆகும். உதரணமாக:-
EUR/USD ஐ 1.4140 என்ற விலையில் trade செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இப்பொது நீங்கள் இந்த விலையில் வாங்க நினைத்தால் ; Buy என்பதை கிளிக் செய்ய வேண்டும் உங்களுடைய trading platform உடனே buy ஆர்டர் ஐ அந்த சரியான விலையில் ஏற்படுத்தி விடும்.
லிமிட் ஆர்டர் :
லிமிட் ஆர்டர் என்பது குறிபிட்ட விலையில் வாங்கவோ அல்லது விற்கவோ நிர்ணயிக்கப்பட்ட ஆர்டர் ஆகும். இந்த ஆர்டர் இல் முக்கியமானது விலை மற்றும் காலம் ஆகும். உதரணமாக:-
EUR/USD 1.4050 இல் இருபதாக வைத்து கொள்ளவோம். நீங்கள்
EUR/USD 1.4070 வந்த பிறகு ஓர் buy ஆர்டர் கொடுக்க நினைத்தாள். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் முன்பு காத்து கிடக்க வேண்டியதில்லை. நீங்கள் Buy லிமிட் ஆர்டர் செட் செய்து விட்டால் போதும்.
இப்பொழுது விலை 1.4070 வரை உயர்ந்தால் போதும் உங்களுடைய trading platform தானாகவே அந்த buy ஆர்டர் ஐ ஏற்படுத்தி விடும். நீங்கள் எந்த currency ,எந்த விலையில், வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. Buy ஆர்டர்-ஐ செட் செய்ய Buy லிமிட். Sell ஆர்டர்-ஐ செட் செய்ய Sell லிமிட். லிமிட் ஆர்டர் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதையும் செட் செய்து விடலாம்.
ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss order):
நீங்கள் EUR/USD ஐ 1.5030 இல் முன்பு வாங்கியதாக கொள்வோம். நீங்கள் இழக்க தகுந்த அதிக பட்ச விலை(Stop-loss) 1.5000 என செட் செய்து விட்டால்…மார்க்கெட்டும் 1.5030 இக்கு மேலே ஏறாமல் 1.5000
இக்கு கிழே இறங்கினால் உங்களுடைய
trading platform தானாகவே 1.5000
இல் ஓர் sell ஆர்டர்I ஏற்படுத்தி அந்த trade-ஐ மூடி விடும். உங்களுடைய இழப்பு $30 டாலர் உடன் நிறுத்தி விடும்.ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss
order) மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். ஏனெனில் உங்களுடைய பணம் முழுவதும் இழந்து விடுவோமோ என்று பயப்பட தேவை இல்லை.