Monday, 27 March 2017

Margin Call Leverage Call Meaning

Margin Call என்றால் என்ன?

நீங்கள் ஓர் ரெகுலர் போரெக்ஸ் அக்கௌன்ட் $2,000 உடன் ஓப்பன் செய்வதாக வைத்து கொள்வோம். ஓர் ஸ்டாண்டர்ட் லாட் இல் (100,000 units) EUR/USD ஓப்பன் செய்வதாக வைத்து கொள்வோம், இதற்கு குறைந்த பட்ச எல்லை தொகை(margin) $1000 தேவை. உபயோக படுத்தக்கூடிய எல்லை தொகை(usable margin) என்பது புதிதாக trade open செய்ய பயன்படுவது ஆகும்.

நீங்கள் $2,000 உடன் ஆரம்பித்திர்கள் ஆதனால் உங்களுடைய உபயோக படுத்தகூடிய எல்லை தொகை(usable margin) $2,000 ஆகும். ஆனால் நீங்கள் 1 லாட்டில் trade ஓப்பன் செய்துள்ளதால் அதற்கு தேவையான எல்லை தொகை$1,000 பயன்படுத்த பட்டுவிட்டது(used margin) . எனவே மீதம் $1000 மட்டுமே உள்ளது(usable margin) . அதனால் இப்பொழுது உங்களது எல்லை தொகை(usable margin) $1,000 மட்டுமே.

லிவேரயிஜ்(Leverage) என்றால் என்ன ?

எப்படி நம்மை போல் சிறிய முதலிட்டாளர்கள் பெரிய தொகையை trade செய்கிறார்கள் என்று தெரியுமா? உங்களுடைய புரோக்கர்ஐ- ஓர் வங்கியாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.$100,000 currecy வாங்க $1,000 கொடுத்தால் போதும்.உண்மையாகவா? போரெக்ஸ் trading இல் லிவேரயிஜ்(Leverage) எப்படி செயல்படுகிறது என்று பார்போம்.
எவ்வளவு லிவேரயிஜ்(Leverage) பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் புரோக்கர் ஐயும் உங்கள் விருப்பத்தையும் பொருத்தது.

புரோக்கர்க்கு முதலில் trade deposit தேவை. trade deposit அக்கௌன்ட் margin என்றும் அழைக்கப்படுகிறது.நீங்கள் பணத்தை deposit செய்ததும் trade செய்ய ஆரம்பித்து விடலாம்.புரோக்கர் உங்களிடம் ஓர் trade செய்ய எவ்வளவு தேவை என்பதை குறிப்பிடுவார்கள் .


உதரணமாக உங்களுடைய லிவேரயிஜ்(Leverage) 100:1 ஆக இருந்து நீங்கள் $100,000 இக்கான மதிப்பில் trade செய்ய விரும்பினால் உங்களுடைய புரோக்கர் $1,000 ஆக குறிப்பிடுவார். அதுபோல நீங்கள் $5,000 வைத்து இருந்தால் உங்களை $500,000 வரை trade செய்ய அனுமதிப்பார்கள். குறைந்தபட்ச பாதுகாப்பு தொகை(margin) புரோக்கர் பொருத்து மாறுபடும்.