Monday, 27 March 2017

போரெக்ஸ் டிரேடிங் என்றால் என்ன ?

போரெக்ஸ் டிரேடிங்

போரெக்ஸ் மார்க்கெட், உலகத்தில் பெரிய மற்றும் நம்பர் 1 மார்க்கெட். இதில் தினசரி 8 லட்சம் கோடி வர்த்தகம் செய்யப்படுகிறது. அதனால் போரெக்ஸ்-ல் நிறைய சம்பாதிக்க முடியும். போரெக்ஸ் மார்க்கெட் ஏறினாலும் இறங்கினாலும்  சரி நம்மால் சம்பாதிக்க முடியும் என்பது இதன் சிறப்பு!

போரக்ஸ் என்றால் என்ன ?

FOREX = Foreign Exchange (Exchange Currencies)
அந்நிய செலவாணியை பரிமாற்றம் செய்வது.

டிரேடிங்(வர்த்தகம்) என்றால் என்ன?

பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகும்.

போரெக்ஸ் டிரேடிங் என்றால் என்ன ?

அந்நிய செலவாணியை வாங்குதல் மற்றும் விற்றல் ஆகும். எடுத்துகாட்டாக, நாம் ஒரு அமெரிக்க டாலர் வாங்க 68 இந்திய ரூபாய் கொடுக்க(விற்க) வேண்டும்.

சந்தை என்றால் என்ன ?

பொருளை வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள இடம் தான் சந்தை.

போரெக்ஸ் மார்க்கெட்(சந்தை) என்றால் என்ன ?


பல வெளிநாட்டு நாணயங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஏற்ற இடம் தான் போரெக்ஸ் மார்க்கெட்(சந்தை).